வெள்ளி, 21 அக்டோபர், 2016

"அழகு"

பாண்டவ பூமியிலே - பல்லவ
சிற்பம் - சோழ
நாட்டு கருதாய் - மருத
நாட்டு மாதிரி,


 நிறத்தில்...
சூரிய தங்கம்
நிலாவின் நிமிர்த்தம்,


தினம்...
நிழல் கண்டே காண்கிறேன்,
நிலாவுக்கு சொந்தக்காரி,


என்னுள்...
மனம் திறந்த மாதாய் - சுவை
தந்த சூழலில்,


அந்த...
ரோஜாவும் அழகில்லை
மல்லிகையும் மனக்கவே இல்லை


நித்தம் பேசும் தமிழ் பண்பாய்
இன்னும் ஒரு தமிழ் சங்கம்
என்றென்றும் பாட்டெழுத, உங்களுக்காய் - என்
மனதார வாழ்த்தி.  (சீனி)

பாசம்





பெயர் சொல்ல..
பெற்றெடுத்தேன்..
எனக்கென்று - ஒரு
மகனாய்..

மார்போடு..
அணைச்சு வச்சேன்,
பெயர் சொல்ல - வாழ
சொன்னேன்,

மூத்தவங்க,
மரபையெல்லாம்..
முன்னோருங்க,
சொல்லித்தர..

மூன்று,
தலை முறையாய்..
மூளைக்குள்ளே வச்சிருந்து..!!
உறக்கத்து,
கதையாய் சொல்லி..
உரம் போட்டு வளர்த்துவிட்டேன்..!!!

என்னைப்போல..
இருக்க வச்சேன்..
உழவு புடுச்சு..
உண்ண சொன்னேன்..!

"வியர்வை" போகிடுச்சாம்...

வியாக்கியானம் பேசி வச்சு..
பள்ளிக்கூடம்..
போறேன் என்றான்..

அசட்டை செய்யாது,
ஆச்சர்யம் இல்லாது,

"பள்ளிக்கூடம்" போகிடத்தான்..
வாழ்த்து சொல்லி..
அனுப்பி வச்சேன்ன்..

படுச்சவங்க
எல்லோரும் - என்
பாட்டன் "வாழ்ந்த வாழ்கை" அதை
பாமரன்னு
சொல்லில் வச்சான் - என்
முப்பாட்டன், வாழ்ந்து ஏனோ..
போர்க்களத்து துயர் துடைச்சான்..!!

"அ" வென்று,
சொல்லி வைத்தான்.

ஆச்சர்யம் என்ன இருக்கு..

சாப்பிடும் போது தானே
"ஆ" சொல்லி..
வாய் பிளப்போம்.

ஒன்று, இரண்டு, ஓராயிரம்..
சொல்லிக்கொண்டே போனாலும்..

"என்" என்ற வார்த்தையில் தான்
அத்தனையும் அடங்கிடுச்சே..

மகன் பேரு..
நிலைத்து நிற்க,
ஓர் ஆயிரம்  பேர்..
சொல்லில் வைக்க..

"என்" என்ற,
வார்த்தை சொல்லி..
"ஆ" என்ற,
உணவு தந்தேன்.

மூக்கனாங்கயறு கட்டி..
மூச்சு முட்ட..
தின்னு புட்டு,
மூளை முடுக்கு சுத்தி வந்து..
மூணு வேலை..
சோறு போடும்,
பசு மாட்டு மந்தை கூட..
பாசத்துக்கு அடிமைதாங்க..!!

மூச்சிறைக்க..
உழைத்து தந்து,

மூச்சுமுட்ட தின்ன வச்சு..

மூளைக்கு,
அறிவை ஊட்டி..

மந்தை கொசு..
கடித்திடாம..

பார்த்துக்கொண்ட
படிச்ச பய..!!

நட்ட நாடு சாமத்துல..
முன் பின் தெரியாம..

முழு நோட்ட வீசிபுட்டு..

பர தேசம் போயிபுட்டான் - என்ன
பார்க்க ஒரு நாதி இல்லை..

முதியோர் இல்லத்துல.

ஏடெடுத்து படுச்ச பைய..

போயிட்டானே ஏமாத்தி.  ( சீனி)

வியாழன், 20 அக்டோபர், 2016

கடுதாசி

உங்க..
அன்புக்கு பஞ்சமில்லை - இது
ஆசை என்ற.. நோயுமில்லை..

எப்பொழுதோ.. பார்த்த உங்க
பார்வை - இதை,
சொல்லுதுங்க..!

என்..
எண்ணமெலாம் உங்களோடு..
ஏங்க சொல்லி.. அழைத்ததனால்..!

உங்களையே நினைத்தேனாம்..
ஊர் பூரா.. பேசுதுங்க..!

தித்திக்கும் வயசினிலே..
திரும்பி பார்க்க, வைக்குதுங்க..!

திரும்பி பார்த்த.. பின்னேதான்,
திருட்டுத்தனம்.. பண்ணுதுங்க..!

திக்கு திசை தெரியாது..
தேம்பி தேம்பி.. ஏங்குதுங்க..!

இது..
இம்சை இல்லா.. இம்சை என்று,
ஈர நெஞ்சம் நினைக்கும் முன்னே,

தேவை இல்லா.. தேவை என்று,
தேவை வந்து.. சொல்லுதுங்க..!

என்னமோ ஏதோன்னு
நினைத்து "கொஞ்சம்" பதறாதீங்க..!

குழம்பி போய் இருக்கேங்க..
பதிலை வந்து, சொல்லிருங்க.  (சீனி)

கொள்கை

கொள்கையே..

இல்லாததுகூட - ஒரு

கொள்கைதானாம் - அது,

" கொள்கையே..

இல்லாத கொள்கை"  (சீனி )

விதவை






உள்ளத்தில் உள

எண்ணத்தில் தெரிகிறது


வாழ வேண்டுமென்ற, ஆசை

உனக்குள்....

வாழ்ந்துதான் பாரேன்...

வெற்றி எதற்கு...? _ நீ

நிட்சயம் தோற்க மாட்டாய்..  (சீனி)

மார்வாடு






மானம் கெட்டவனின்..
மனதோடு ஒன்றிப்போய்...!
மானம் கெட்டேனும்,
வாழும் வாழ்க்கையே.. மார்வாடு...!!

உழைப்பு வேண்டும்...
எத்தனிக்கும் மனசு...!
கவலை இல்லாக்கலவன் - அவன்
உயர்வுக்கு.. மார்வாடு...!!

மனம் பெற்றும்,
வாழாது வாழ்க்கை...
நம்மில் நாமே செய்த மார்வாடு...!!

வின் முட்டும்-வீண் தர்க்கம்...
சிந்தனைக்கு எட்டா...
சிந்தனையின்... மார்வாடு..!

நற்செயல்.. புரிந்தாலே - நாளும்,
நலம் உண்டாம் - தன்
சிறப்புக்கு வேண்டா...
சின்னசாதிப்பயலின்.. மார்வாடு..!

கலையா கனவு... கண்டதும் உறக்கம்,
ஆழ்ந்த.. சிந்தனைக்கு, மார்வாடு..!

பிழையொன்றும் இல்லை - உன்
நட்பின் எல்லை இருந்தும்...
மறந்தேன் - நான்
புரியாமல் இருந்த மார்வாடு..!

அறிவுக்கு எட்டியும்.. அசரவில்லை - என்
மனம் - நீ
தரும் நட்புக்கு - நான்
தரும் பிழையே.. மார்வாடு...!

உள்ளங்கள் இறைஞ்சும் - ஊமை
குரலுக்குள்ளே, உன்னதமாய்...
வார்த்தை உண்டு - அது
புரியா வினா..? என்றால் - நம்
புத்தி புரியும்... புத்தாந்த, மார்வாடு...!

அன்றில் இல்லை, என்றுமே இல்லை...
கத்தை கத்தையாக...
வித்தகனின் விமர்சனம். பேனா மையில்...
மறந்து போவான்.. மறுகணம் - அது
கொள்கைக்கு - அவன்
கோட்பாடு.. மார்வாடு...!

இளந்துயரத்தில்.. துயரம் கண்டு...
தொல்லைகள் பல கண்டு...
சோதனையில் - தோல்
கொடுத்து.. தோலமைக்கு - தான்
ஏங்கி, என்றும் நிலைத்திருப்போம்...!
என்றெண்னும்.. போதினிலும்...
என்றோ, ஒரு நாள்..!
என்னோற்றால், விமர்சனம்..

முன்கால.. வாழ்க்கையின்,
முக்கால் வாழ்க்கை - அன்றே,
அழித்திடுவாள் - அவள்
பேசும், பேச்சு... மார்வாடு...!

கவிதைக்கு இறைஞ்சி கனா கண்ட - என்
தோழா தர தவறிவிட்டேனா - அது,
நம்மில், உமக்காய் மார்வாடு...!

இல்லை,

கேட்டும்... தரவில்லையே.. என்று,
எமை மறந்து போனாயோ...? - அது
எமக்கு செய்யும் மார்வாடு...!

நித்தநிக்கும் - என்
மனம் - நிலா
தேடி சிந்தனை, கிடைக்கவில்லை - அன்று
அமாவாசை.
என்னோற்றான் - என்
எண்ணத்தில்.. செய்வதில்லை மார்வாடு...!

மேலும்,

இன்னும் இருக்கு...

இருந்தும் போதும்,

என்றெண்ணி...

முடிக்கிறேன்.

முனன்காதீர்.

"அதுவும் மார்வாடு".  (சீனி)

"காதல்"

வாழ்நாளில்...
ஒரு முறை,


வருடத்தில்...
இரண்டு முறை,


மாதத்தில்...
மூன்று முறை,

வார நாட்களில்

நாளுக்கு நாள்-தினமும்...
ஐந்து முறை

நேசனாகிறேன் உனக்கு - நீ

என்னை விரும்பியதால் (சீனி)

நிரந்தர வெற்றி





வெற்றிக்கு வேண்டாம்...
முதல்படி...!!!

 
தோல்வியை...
முதலில் படி - அது,
சிந்தணையில் உறங்கு...
"வெற்றிக்கு முயற்சி செய்" 


உறங்கியவன் - எல்லாம்...
வெற்றி பெற வில்லை - வெற்றி
பெற்ற யாரும்...
உறங்கியவனும் இல்லை - ஆக,
வெற்றிக்கு வேண்டாம்...
முதல்படி...


தோல்வியை...!!!
முதலில் படி... 

இப்படிக்கு   (சீனி)

சிந்தி... விடாதே...





சிந்தி..
விடாதே..
சிந்தி..!


வியர்வை.. சிந்தியேனும்..
சிந்தி..!!


அறிவை.. சிந்தி - உன்,
அறிவை...சிந்தி - அதை,
மனிதனாய்..சிந்தி.  (சீனி)

தரம்





உன் தரம் - நீ

பார்க்கும் பார்வையில் தெறிய...

நின் குடும்ப தரம் - நீ

பேசும் பேச்சில் அறிய...!

தான் மண்ணின் தரம் - நீ

புரியும் செயலில் தெறிய...

நிகர் நாட்டின் தரம் - நீ

உடுத்தும் உடையில் அறிய...!!

நித்தம் உலகத்தரம் - நீ

வணங்கும் வணக்கத்தில் தெறிய - இம்

மானிட "சித்தமும்" - நல்

தேடித்தான் அலைந்திடுமோ...? (சீனி)

மனைவி என்ற காதலிக்கு





புத்தம் புது மனம் பெற்று..
பொன் மேனி விரல் தொட்டு,
"பூ" சூட வந்தேன்..
நல்லதாய் ஒரு "பூ"
சொல்லித்தா சிந்தனையே..
அவளுக்காய் சூடி வைக்க,

மஞ்சத்து மச்சத்தால்..!
துளிர் விட்ட தேவதைக்கு..
ஆராதனை செய்து வைக்க,
அறிய செயல் தேடி..
அலைகிறதேன் நெஞ்சம்,

மனமார்ந்து ஏற்று..
மன நிறை கொண்டு..
மாங்கல்யம் தந்து வைத்த..
மணப்பெண்ணே வா..
மல்லிகை "பூ" சூட..

விக்கித்தவிர்த்து..
விளையாட்டாய் வேண்டி..
வினை பெற்று வர,
வேட்க்கையில் வா..
தாழம்பூ நான் தர..

செவ்வரத்தம் பூவும்..
செந்நிற தேனும் தந்த..
சுவையோடு இதல்,


பிச்சிப்பூவும்..
தென்றல் காற்றும் தந்த..
வாசனை மேனி,

வாடா மல்லியும்..
வாடாங்கும் மேனியும் தந்த..
வனப்பூ..

அள்ளி அணைத்தால் கமகம்,

மனம் பெற்ற வாழ்வில் மகிழம்,

உறவோடு இருக்கையில் வாழை,

மஞ்சம் இட்ட நினைவில் மதுரம்,

மகிழ்ச்சியின் நெருக்கத்து மந்தாரை,

கானகத்து தேடலில் தும்பை,

காத்துக்கிடக்கையில் குறுஞ்சி,

செந்துருக்கு நெத்தியில் குங்குமம்,

பள்ளி கொண்ட பாடத்து செம்பருத்தி,

விக்கித்து நிக்கையிலே காந்தள்.

மொத்தத்தில்,

கட்டவிழ்ந்த நேரத்து..
நாணத்து சாமந்தி - இது,
மொத்த பூவும் அவளாகவே,

ஆகையால்..

நல்லதாய் ஒரு "பூ"

சொல்லித்தா சிந்தனையே..
அவளுக்காய் சூடிவைக்க. ( சீனி )

காதல்











விக்கித்த வேதனையில்..
"வித்தாந்தமாம்"..
கண்டாச்சு ..

சபலத்து சிரிப்பு கூட ..
"சங்கீத" - பாசை ஆச்சு..

உவமையாய் பேசி...
"உண்மையாய்" ஆஹிடுச்சு..

இட்டு.. இட்டு "இச்சையிலே"
இச்சு.. இச்சு...
வச்சு... வச்சால் - அது தான்
இன்பமாச்சு...


ஆகையால்.....

திரித்த.. தீங்கில்..
திரளாய்வாய் - தளைத்த
நிமிர்த்தமாய்...
எதுவாய் இருக்கும்..?
ஏதுவாய் இருப்பது..!

என்று..

வித்தார கள்ளியில்..
கத்தாளை - முள்
பறித்து..
எழுதியது - காதல். ( சீனி )

பட்டினம்











பட்டணம் போய் சேர்ந்தாலும்,
பட்டினம் - நீ மறக்காதே.!

பணத்துக்காக வாழ்ந்து - என்ன..?
பாசாங்கு பர்த்துபுட்டே.?

பந்தலிலே நீர் வச்சு
தாகம் தீர்க்க தந்தாலும் - நம்ம
பனங்காட்டு கொல்லைதாங்க - பத
நீர் தந்து தாகம் தீர்க்கும்..!!

வயலோரம் வரப்பு வச்சு,
வெள்ளரி பூ பூத்தாலும்...

வேலைக்கு உணவாகும்
வேலை இல்லா வினை போகும்..!!!

கோவை செடி கொள்ளையிலே,
கூட்டாச்சோறு சமைச்சு வச்சு,
குழைந்தையோடு கொஞ்சி பேசி
கொஞ்சமா நீ தின்னு பாரு..!

கருவேலன் தூரில் கண்ட...
கரு நாக பாம்பு பார்த்து,
கருவம் வச்சே அடித்திடுவான்
பட்டினத்து பசங்க தாங்க...!!

குளம் பார்த்து நீந்தி குளித்து..
காட்டு முயலும் - நாட்டு
கோழி கறியும்..
வேப்பமரத்து நிழலில் தின்னு,

பட்டினத்து பறவை பார்த்து..
கொஞ்சமா கண் மூடு.

பக்கத்து வீட்டிலுல்ல,
பழஞ்சோறு கஞ்சி கேட்டு..
உப்பு போட்டு குடித்துப்பாரு..
உன்னை நீ மறந்திடுவாய்..!!!

மூத்தவங்க மரியாதையும்..
முன்னோருங்க வம்சாவழியும்..
முன்னிறுத்தி பேசிப்பாரு,
உன்னைப்பற்றி தெரிந்திடுவாய்..!!

பாட்டியோடு பேசிப்பாரு..
வம்பிழுத்து சண்டை போடு - அவள்,
பேச்சை நெஞ்சில் நிறுத்து..
காலத்து கவிஞனாவாய்..!!

பட்டணத்து பேச்சு எல்லாம்...
பட்டினத்தை அடைந்தாலும்.

பட்டினத்து பேச்சுதாங்க,
பழமொழியா ஆச்சுதுங்க.  (சீனி)

கடவுள்







நத்தைக்கும் உணவு உண்டு..!
கொடுத்தாயா..?

நதி,
கடல் நீருக்கும்..
நிறம் உண்டு.!
பிரித்தாயா..?

நின் தேடும்..
மனதிற்கும்..
எண்ணம் உண்டு.!
புரிந்தாயா..?

வேறென்ன வேண்டும் உனக்கு..
கடவுள் பற்றி அறிவதற்கு ( சீனி ).

கிராமத்து காதல்













அத்துவான காட்டுக்குள்ளே..
அந்தி சாயும் நேரத்துலே..
அங்கே இங்கே பார்த்து வச்சு - என்னை
ஆத்மார்த்தம் தந்தவளே..!


வக்கனையா வாய் பேசி..
வாய் சவடால் கொஞ்சம் பேசி..
வாய் சிரிச்சு வந்தவளே - என்னை
வாய் பிளக்க வச்சவளே..!!


உள்ளத்து உவமை எல்லாம்..
உன்னோடு பேசிடத்தான்..
ஊருக்குல்லே ஓடிடாதே - இன்னும்
ஒரு முறை பாத்துக்கறேன்..


பொல்லாத "பூ"ச்சூடி..
புறம் சொல்லி போனவளே..
போயிட்டு வந்துரடி - நம்ம
புறம்போக்கு கொள்ளை பக்கம்..


உள்ளம் எல்லாம் வெடிக்குதடி..
ஊமத்தங்காய் போல..:
ஊர் அறிய கொதிக்க வச்சு - உன்னை
உலை சோறு திங்க வைக்க..!!!


பூட்டி வச்ச நெஞ்சுக்குள்ளே..
"பூ"ச்சாரல் அடிக்குதடி..
பூசைக்கு வந்துட்டு போ - மனக்
கோயிலுன்னு நான் வாரேன்..!


ஒவ்வொரு நாள் முதலாய்..
பார்த்து வைக்க ஆசை தாண்டி..
நித்தம் வா கொள்ளை பக்கம் - இந்த
சம்சாரி சிருச்சு வைக்க..!!


பாதம் பட்ட நாள் முதலா..
கொல்லையுந்தான் செழிக்குதடி..
கொள்ளை கொள்ள வந்துரடி - இன்னும்
கொஞ்சம் பேசி சிருச்சுக்கடி...


மேலும் ...


புத்தம் புது சேலை வச்சு..
சேலையில பூவ வச்சு..
சீர் வரிசை நான் தாரேன் - என்
சீதனமா வந்துரடி.  (சீனி) .

"அ" சொல்லு














அரவணைத்த அன்பில்
ஆசையாய் வாழு..


இன்புற்று இருக்க
ஈகை குணம் பாரு..


உண்மையாய் காண்
ஊற்றெடுக்கும் அறிவு..


எளிமை போற்று...
ஏலனமின்றி..


ஐயம் இல்லாது
ஒற்றுமை பேசு..


ஓங்கி நிற்பாய்
ஒவ்வொரு நாளும்.  (சீனி)

மது











 

மயக்கத்தின்,
மந்தநிலை - அதுவே
மரணத்து..
சொந்தநிலை,


வாழ்வை..
நிர்கதியாக்கிவிடும் - அது
தினமும்,
தரிசனம்..
பெறச்செய்யும்.


மதுவின் மாற்றம்
மற்றுமில்லை - உன்
மனதும் அதில்தான்..
இலயித்து நிற்கும்.


வாழ்க்கையோடு..
போராடும் - உன்
வாழ்வே நின்று..
தள்ளாடும்.


வசந்தகால
வாடை கூட..
மதுவை கண்டால்..
மறைந்து விடும்.


கோடை கால
குளிர் போல
உணர்வு பெற்ற
ஆசை வந்து,


குடிக்க.. குடிக்க..
தீங்காகும் - உன்
குடியே உனக்கு
வீம்பாகும்.  (சீனி)

கிளி ஜோசியம்















பயிற்சி எடுக்கவில்லை...
உழைப்பதற்கு..


கிளிக்கு - பயிற்சி
கொடுக்கிறான் - அவன்,
உண்பதற்கு...


பாவம்...!!!

பசி என்ற கிலி.  (சீனி)

சுதந்திர தினம்











ஜாதி இன மொழிக்கு - விஷம்
தெளிக்கும் கூடாரங்களே - இவை
ஏதும் கண்டிராத - டாக்டர்
அப்துல் கலாம் எங்கே..?

கேட்டுச்சொள்ளும் - உன்
தலைமையிடம்

தேவையா இது உனக்கு…

தனி ஒரு மனிதனுக்கு - நீதி
கிடக்கவில்லைஎனில் - நித்திரை
எதற்கு உனக்கு …

மூன்று வேலை உணவுக்காக - பாடு
பட்டுக்கொண்டிருக்கும் - கோடான
கோடி மக்கள் நாட்டில்

பேர், புகழ், மாட, மாளிகை
அனுபவிக்க தலைவனா..? - உன்
அடுத்த வேலை உணவுக்கு
யோசித்தாயா..?

தலைவன்கள் அனைவரும் - அவன்
தலைமுறைக்கே சேர்த்து
வைத்துள்ளான் என்பதை
சிந்தித்தாயா..?

விடைகாணும் வேட்க்கையில் வீறெடு …

இ ன் று முதல் யோசி

இன்னுமொரு விடுதலை பெற்றிடு…

சிந்தனை உனக்கு வரவேண்டுமானால்

இந்தியனாய்
இளை ஞனாய்
தமிழனாய்
மட்டு மல்ல - நல்ல
மனிதனாய் …

“ கனவு காண் ”

எடுத்துக்காட்டாய்
அப்துல் கலாம்.  (சீனி)

அறிவியல்









தேடா நெருப்பில்..
தீஞ்சுவை உணவேது,

தேயா நிலவில்,
பவ்ர்ணமிக்கு இடமேது..

உச்சத்து வரம்பென்ற..
உலகளாவிய பேச்சுதனை..!
உச்சவரம்பு இல்லையென்று,
உதாசீனப்படுத்தியவன்..!!
வயிற்றுக்கு உணவு இல்லை..
வானொலிக்கு - இடம்
கொடுத்தான்..!!!

சதா சதை காட்டி,
தெருக்கோடி..
சென்றவன்தான்..!
உடம்பில்,
சட்டை பேன,
கற்று கொண்டான்..!!

கால் அயரா..
நடந்து பார்த்த - நாடகத்து,
கேளிக்கையை..!
தொலை நோக்கு,
பார்வை என்ற..
தொலைக்காட்சியில் - கண்டு,
கொண்டான்..!!

கையால் வந்த,
கணக்கை எல்லாம்..
கணினியில்,
அடக்கி வைத்து.

சின்ன.. சின்ன..
செய்திகளை - சிறு
பறவை காலில் கட்டி - சீர்
திருத்தம் செய்ததைத்தான்..
செய்தி என்ற வார்த்தையது,
சிறியதே இல்லையென்று..
செய்தித்தாலாய் சீரழித்தான்.

வேகத்தில் ஓட்டம் தனை..
விவரமாய் சொல்லில் வைக்க,
வாகனம் தயார் செய்து..
வேகத்தடை தந்தவந்தான்..!
விமானமென்ற..
ஒன்றேதான் .
வேகமென்ற - புரிதல்,
கொண்டான்..!!

மின் மினி பூச்சியொன்று,
மிதமாய் மின்னல் செய்ய.!.
மூளைக்கு வேலை தந்து..
மின்விளக்கு தந்தவந்தான்.!!.

ஆகா.. ஆகா.. சொல்லி..
அணுகுண்டு கண்டபிறகு..
"ஹிரோஷிமா".
பார்த்து விட்டான்..!!!

இனி..

சொந்தம்.. பந்தம்..
பேச்சில்லை - வீண்
தர்க்கமென்ற..
திராணி இல்லை.

சொக்க வைக்க,
வச்சுபுட்டான்..
சோம்பேறியாய்,
சொகுசு பார்க்க..!

மிச்சமென்று, சொச்சமென்று,
சொல்லி சென்று போனவனே..
இன்னுமென்ன.
வைத்திருக்காய் - சுய
லாபம் தேடிக்கொள்ள..

துரிதமாய்.. தேடலில்..
"தீ" கூட - விஞ்ஞானம்
திசை மாறி வந்து விட்ட..!
துயில் நீங்கும்..
கண்டு பிடிப்பு..!!

நம்..
கண் இமை போதாது - கரு
விழி மூடாது..!
கங்கணம் கட்டிக்கொண்டு..
கரைந்ததென்ன கண்ணீராய்..!!

தோரணையில் - தேடல்,
வந்தும்..!
துச்சம்மென்றும் சொன்னாலும்..!!
அப்பளுக்கில்லையென்ற.
அறிவியலாம்..!!
வியப்பேது.  (சீனி).

கொலுசு சப்தம்









கொஞ்சும்போது,
மிஞ்சுதடி - உன்
கொலுசு..



மஞ்சத்திலும்,
இசைக்குதடி - உன்
கொலுசு..



சிந்தனையை,
சிறகடிக்கும் - அந்த
சப்தம்...



சிலிர்த்தே,
பார்க்கவைக்கும் - மொத்த
சப்தம்.



உறக்கத்து..
சிந்தனையில்..
சில துளி..



சின்ன சின்ன..
சில்மிசத்தில்..
பல துளி..



பார்க்காமல்..
போகையிலே..
மிஞ்சுதடி..

பார்த்துப்புட்டு..
போகையிலே..
கெஞ்சுதடி..

.

ஒய்யார..
நடையினிலே..
கொல்லுதடி,



ஒசந்து "நீ"
பார்க்கையிலே..
மெல்லுதடி.



ஓடி வர..
கேட்கையிலே - உருட்டல்
சப்தம்..



ஓடாமல்..
நிற்கையிலே - உறங்கும்
சப்தம்.



உறசி கொஞ்சம்,
பார்க்கையிலே..
சிலிர்த்திடுமே..!



ஓற பார்வை,
பார்க்கும் போது..
மிரட்டிடுமே..!!



"பூ" பறிக்க,
போகையிலே - ஒத்த
சப்தம்..



பரித்த பின்பு..
பார்க்கையிலே - பயத்தில்
சப்தம்..!!!



முத்தமிட்டு..
போகையிலே - ஒரு
சப்தம்..



முத்தமிட்ட,
பின்னாலே - மொத்த
சப்தம்.  (சீனி)

புதன், 19 அக்டோபர், 2016

நாணல் நானுதாம்

நானமே தெரியாத...
நாணல் - நானும்போது...!!!

நானம்கொண்ட, நலவான்களே...!!!

நா, நய, வார்த்தைகளால்...

நானக்கும், நானக்குமேன்றுபேசி...!!!

வீனுக்கும் - வீனுக்கு
தள்ளி விட்டாயே - எம்
மானிடனை -  இது
முறையா...? (சீனி)
















சாடி

எழுது...
உண்மையை...
உண்மையாய்.

தத்தமது தாயும்...
நிகரிலா தமிழும்,
தேண், பால் சுவை அமுதும்,
ருசி என்று சொல்லி...
வாழ்த்து பெற வந்ததையும்,

எழுது...
பொய்யை...
பொய்யாய்.

சஞ்சலங்கள் கூடி-தன்
சமரசம் தேடி...
சமக்ஞைகள்-பல
கண்டதையும்,

எழுது...
பொய்யை மட்டும்...
பொய்யாய்.

வார்த்தைக்கு வார்த்தை
வந்தேனும் வந்து...
வஞ்சித்து நின்று-நின்
சருக்குண்டு சென்றதையும்

எழுதாதே...
உண்மையை...
பொய்யாய்.

மாசற்ற மாண்பாய்...
மானிடர் வந்து - வினை
தாண்டி - வசை
பெற்றுசசென்று
வேதித்து...
நின்றதை மட்டும். (சீனி)

கடலோடு ஒரு நாள்

ஓசையுடன்..
கடல் அலை.!!!

காற்றோடு..
கடற்கரை.!!!

கடலோர...
சிப்பியும்,
கரை புரண்ட..
முத்தும்,
நீந்தி குளிக்கும்..
மகிழ்ச்சியில்..!!!

அலைகண்டு..
ஓயாத ஓடம்..!!!

ஓய்ந்த பின்பும்..
நனையவரும் வலைகள்.

ஓடி நனைக்கும் கால்களும்..

ஒய்யார கூச்சலும்..

ஒத்தராக பாடலும்..

கிண்டல் பேச்சும் ..

ஏலன கேலியும்..

வீடு வந்தால்,
மறைந்துபோகும்..!!!

எத்தனையோ மீன்கள்..
வகை வகையாக..!!!

வெட்ட வெளி மணல் - அதில்,
காய கிடக்கும் கருவாடு..

ஆழம் செல்ல காத்திருப்பான்,

காலைபொழுது கஞ்சியுடன்.

எங்கே..?
சங்கு - என்று,
எடுத்துக்காட்டும்
கண்ணாடியோடு..

மகிழ்ச்சியில்..

முக்குளித்து,எந்திரித்து..!!!

மறு மறுக்கு, மறுக்கி..!!!

சங்கு தேடும்..
தோரணையில்..!!!

திடுக்கிட வைக்கும்..
திருக்கைகள்..!!!

கடல் அட்டை..
கட்டில் கட்ட..!!!

சிங்கியுடன், எறால்களும்,

கடல் பள்ளியுடன், குதிரைகளும்

பாசியுடன், பயிர்களும்...

வலைக்குள் வந்துவிட்டால்..!!!

நண்டு கண்டு..
கால் முறிக்க - கணவாய்
கூந்தல் கண்டு..
நாக்கு ஊர..!!!

ஊற்றெடுக்கும், அன்பு..
வீட்டில் தான் தெரியும்..!!!

சொல்லில்வைத்தாள் புரியாது,
செய்திருந்தால் ரசிப்பாய்.  (சீனி)